பேஸ்புக்கிற்கு 9 வயது-evolution of facebook

எப்படி இருந்த பேஸ்புக் இப்போது இப்படியாகிவிட்டது.பேஸ்புக் என்றொரு ஹொலிவூட்படம் வந்திருந்தது அதில்  சக்கர்பேர்க்,பேஸ்புக்கின் வரலாறை காட்டியிருப்பார்கள் சக்கர்பேர்க் characterக்கு தெரிவுசெய்யப்பட்ட jesse eisenberg  ரங்க் ருவிஸ்டில் கின்னஸ் சாதனைசெய்தவர் ரேஞ்சிற்கு பேசித்தள்ளுவார்.காரணம் ஓரளவு முழுமையாகவாவது பேஸ்புக்,சக்கர்பேர்க் வாழ்க்கையில் நடந்தவைகளை வெளிப்படுத்தவேண்டுமென்ற முயற்சிதான்.சப் டைட்டில் இல்லாமல் அதைப்பார்த்து நொந்துகொண்டது தனிக்கதை.இன்று 4 பெப்ரவரி பேஸ்புக்கின் பிறந்த நாள். நமது பிறந்த நாளை நண்பர்கள் மற்ந்தால்கூட  கவலைப்படத்தேவையில்லை என்ற தைரியத்தைக்கொடுத்த பேஸ்புக்கின் பிறந்த நாள் இன்று.

பேஸ்புக் புரொபைலின் பரிணாமவளர்ச்சி

2005 இல்-நியூஸ் பீட்,யூஸர் அக்டிவிட்டி போன்ற எதுவும் இல்லாமல் ஏதோ பயோடேட்டா ரேஞ்சிற்குத்தான் பேஸ்புக் 2005 இல் இருந்தது.


2006 இல்-நியூஸ்பீட்,யூஸர் அக்டிவிட்டிக்கள் ஓரளவுக்கு பாவனைக்கு விடப்பட்டன


2007இல்-புரொபைலில் அவளவு பெரியமாற்றம் இல்லை ஆனால் பாவனையாளர்களிற்கிடையிலான தொடர்பாடல்களை அதிகரித்தது.


2008- Publisher tool bar அறிமுகப்படுத்தப்பட்டது இதன்மூலம் யூஸர் ஸ்ரேட்டஸ்,போட்டோக்கள்,லிங்க் களை பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது.


2008இல் பேஸ்புக் வெல்கம்பேஜ்

2009-பான் பேஜ் ஒன்றை லைக் செய்வதன் மூலம் நியூஸ்பீட்களைப்பெற்றுக்கொள்ளமுடியும்

2010-புதிய ப்ரொபைல் அறிமுகம் மேலே போட்டோக்களால்  பானரை உருவாக்கமுடியும்.அதோடு வலது மேற்புறத்தில் நமது நண்பர்களுக்கும் எங்களுக்கும் எத்தனை நண்பர்கள் பொதுவாக உள்ளார்கள் என்பதையும் பார்க்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.

2011-View As என்ற விக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது.வலதுபக்க மேல் மூலையில் ஏனைய நண்பர்கள்,நாம் லைக் செய்த பேஜ்களின் நியூஸ்பீட்களை இதில் அவதானிக்கமுடியும்


Ticker அறிமுகம்

Video Chat அறிமுகம்

subscribe அறிமுகப்படுத்தப்பட்டது பின்னர் அதுfollowers ஆக மாற்றப்பட்டது

இதே ஆண்டில் ரைம்லைன் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஹாண்ட்போன்மூலம் பேஸ்புக் பாவனை அதிகரித்ததன் காரணமாக App Center உருவாக்கப்பட்டது.இதில் பெரும்பாலானவை கேம்கள்

The Evolution Of Facebook Social Widgets 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முஸ்லிமை கொல்லும் முஸ்லிம்? ~ விஸ்வரூபம் விமர்சனம்.

கமல்ஹாசன் கவிதைகள்

தமிழன் பெருமை - பல்புகள் :)