ஒருவேளை இதுதான் பின்னவீனத்துவமா?

Sławek Gruca என்பவரது ஓவியங்கள்.இவரைப்பற்றி இணையத்தில் தேடியதில் பெரிதாக ஒன்றும் அகப்படவில்லை சாதாரண கம்பியூட்டரில் படம் வரைபவர் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கின்றது ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லை(ஒரு ஓவியத்தின் எபிக் என்பதே அதை ரசிப்பவருக்கு விளங்கப்படுத்தாமல் அதை அவரது சிந்தனைக்குள் விட்டுவிடுவதுதான்...ஆனால் அந்த வரையறையை சற்று மீறுகின்றேன்...இதை பார்த்தால் தாய் குழந்தையை அரவணைப்பது போன்றும் தெரியும்...அதோடு கர்ப்பப்பையில் இருந்து குழந்தை வெளியேறுவது போன்றும் இருக்கும்...ஒரு வேளை இதுதான் பின்னவீனத்துவமா?

அதற்குமுதல் பின்னவீனத்துவத்தைப்பற்றி...புரொம் விக்கி...அண்ட் ஜெயமோகன்...

பின்னை நவீனத்துவம் (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு பொதுச்சிந்தனைப்போக்கு. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் உருவான புதியசிந்தனைப்போக்கு நவீனத்துவம் [மாடர்னிசம்] என்று சொல்லப்படுகிறது. அந்தப்போக்கு காலாவதியாகிவிட்டது என்று மறுக்கும் போக்குக்கு பின்நவீனத்துவம் என்று பெயர்.
நவீன தொழில்நுட்பம் உலகை ஒன்றாக்கியது. அனைத்தையும் இணைத்தது. தொழிற்சாலை ,பள்ளி, நவீன போக்குவரத்து, உலகளாவிய ஊடகம் ஆகியவற்றை உருவாக்கியது. அதன் விளைவாக சில மனநிலைகள் உருவாகின. எல்லா கருத்துக்களையும் ஒட்டுமொத்த உலகவரலாற்று பின்னணியில் வைத்துப்பார்ப்பது, எல்லாவற்றுக்கும் சாராம்சம் தேடுவது, எல்லாவற்றையும் தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள முயல்வது, எல்லாவற்றையும் முரண்இருமை [பைனரி] பார்ப்பது போன்றவை அதன் வழிகள். இதுவே நவீனத்துவம்.
பின் நவீனத்துவம் அதை மறுக்கிறது. பின்நவீனத்துவம் நான்கு விஷயங்களை மறுக்கிறது. 1. அது எதையும் உலகளாவியதாக பார்ப்பதில்லை. ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்கிறது. வட்டாரப்படுத்துகிறது 2. அது வரலாற்றை ஒரு அர்த்தபூர்வமான ஓட்டமாக பார்ப்பதில்லை. ஆகவே வரலாற்றை தர்க்கபூர்வமாக அலசும் வரலாற்றுவாதத்தை நிராகரிக்கிறது. 3. அது இரட்டைப்படுத்துதலை ஏற்பதில்லை. முதலாளி தொழிலாளி, இயற்கை மனிதன் போன்ற முரண்இருமைகளை அது மறுக்கிறது மையநோக்கை ஏற்பதில்லை. மையம் அதிகாரம் மூலம் உருவாக்கப்படுவது என நினைக்கிறது 4. எல்லாவற்றையும் முழுமையாக தர்க்கப்படுத்தமுடியாது என அது சொல்கிறது. மன எழுச்சிகள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை. அவையே இலக்கியம்போன்ற கலைகளை உருவாக்குகின்றன. இதை உன்னதமாக்கல் [சப்ளிமேஷன்] என்று சொல்கிறார்கள்.
தமிழில் பின்நவீனத்துவத்தை அறிமுகம் செய்தவர்கள் தமிழவன், நாகார்ஜுனன், பிரேம் ரமேஷ், க பூரணசந்திரன், நோயல் இருதயராஜ், எம். டி. முத்துக்குமாராசாமி போன்றவர்கள். அதை எதிர்த்து எழுதியவர்கள் எஸ்.வி.ராஜதுரை போன்ற மார்க்ஸியர்கள் ,சாரு நிவேதிதா, சுந்தர ராமசாமி போன்ற அழகியல்வாதிகள். ஞானி அதை மார்க்ஸியத்துடன் இணைத்து சிந்தனைசெய்தார்.
கலை இலக்கியம் எனும் எல்லைப்பாடுகளைக் கடந்து தற்போது அது தத்துவம், அரசியல், வாழ்க்கைமுறை, தொழிநுட்பம், கட்டடக்கலை, நாடகம், சினிமா போன்ற களங்களை நோக்கியும் விரிந்து வருகிறது. பின்நவீன யுகம் எனும் வரலாற்றுக் காலகட்டத்தை அது குறிப்பதாக பின்னை நவீன வாதிகள் கருதுகின்றனர்.
பின் அமைப்பியல் சிந்தனையாளர்களான மிஷேல் ஃபூக்கோலக்கான்தெரிதா போன்றோர், அவர்களைத்தொடந்ர்து லியத்தார்ட்,பௌதலியார்ட்டெலூஸ் ஆகியோர், இன்னும் சமீபத்தில் அறிமுகமாகிவரும் புதிய தத்துவவியலாளர்கள் போன்றோர் பின்நவீனத் தத்துவத்தின் தத்துவவியலாளர்களாகக் கருதப்படுகின்றனர்.
இப்போக்கானது இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச்சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது எனக் கூறப்படுகிறது. ஒழுங்குபடுத்தும் கோட்பாடோ, ஒரு தெளிவான மையப் படிநிலையோ அற்ற கலாசார, புலமைத்துவ, கலைத்துவ நிலையாக பின்னவீனத்துவம் குறிப்பிடப்படுகிறது.
இது, தீவிர சிக்கற்றன்மை, முரண்பாடு, குழப்பநிலை, பல்வகைமை, தம்மிடைத் தொடர்புடைமை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. பின்நவீனத்துவம் இலக்கியத்தில் ஒருங்கிணைவுள்ள பிரதிக்கு எதிராக பேசியது. ஆகவே சிதறுண்ட வடிவம் கொண்ட நூல்கள் பல உருவாயின. பிரேம் ரமேஷின் எரிக்கப்பட்ட பிரதிகளும் புதைக்கப்பட்ட மனிதர்களும், சொல் என்றொரு சொல் சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி போன்றவை இவ்வகை நாவல்கள்
பின்நவீனத்துவம் மீபுனைவு [மெடபிக்‌ஷன்] களை உருவாக்கியது. கதைசொல்லுவதையும் கதைக்குள் சேர்த்துக்கொண்டு எழுதுவதைப்பற்றியே எழுதக்கூடிய புனைவுகள் இவை. உள்ளுக்குள்ளேயே சுழலக்கூடியவை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம்,சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டென்ஸியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், பின்தொடரும் நிழலின் குரல் யுவன் சந்திரசேகரின் மணற்கேணி, வெளியேற்றம் முதலியவை இவ்வகைப்பட்டவை.
பின்நவீனத்துவம் பழைய ஆக்கங்களை மீண்டும் எழுதும் வகையையும் உருவாக்கியது. ஜெயமோகனின் கொற்றவை அவ்வகைப்பட்டது. அது சிலப்பதிகாரத்தை மீண்டும் எழுதுகிறது. பின்நவீனத்துவம் வரலாற்றை திரித்து சுதந்திரமாக எழுதும் வகையை அறிமுகம் செய்தது. பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை உதாரணம்
பின்நவீனத்துவம் மொழியை சிதைப்பதும், கதைகளை சிதைப்பதும், மொழியின் கவித்துவத்தை வெளிப்படுத்துவதும் ஆன புதிர்தன்மைகொண்டதாக புனைவுகளை படைத்தது. கோணங்கியின் பாழி, பிதிரா நாவல்களும், உப்புகத்தியில் மறையும் சிறுத்தைகள், பட்டுப் பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் போன்ற சிறுகதைகளும் இவ்வகைப்பட்டது. வாசக்களை தீவிரமாக சிந்திக்கத்தூண்டும் புதிர்நடை எழுத்துவகையைச் செர்ந்தவை.
ஆனால் பின்நவீனத்துவ இலக்கியம் என ஒன்று இல்லை. பின்நவீனத்துவ சாயல் கொண்டவை என்று மட்டுமே படைப்புகளை அடையாளம் செய்ய முடியும்.

பிரபல ரைட்டர் ஜெயமோகனின் விளக்கம்....இங்கே கிளிக்.(ஆமா விஸ்னுபுரம் வாசிச்சீங்களா? எப்படி இருந்தது எனக்கு மண்டை காய்ந்துவிட்டது)
Sławek Gruca இன் படைப்புக்கள் கீழே....

இவரைப்பற்றி இணைய செய்திகள் ...
Sławek Gruca was born in 1971 in Lubliniec, Poland;   He graduated with honours from Pedagogical University in Czestochowa, with graphics specialization, under the supervision of Prof. Richard Osadczy. After studies he moved to Holland where he worked for a couple of years as a computer graphic designer, constantly drawing for commission of private collectors.After coming back to Poland he proceeded with his work as a graphic designer,  and while experimenting with combining traditional drawing with computer graphics Gruca continued drawing with his favourite media: pencil, pens, ink.  In May, 2004 his first exhibition  took place in Warsaw.”My Paranoias” – is a seried of works from  1995-2004 which were presented there as a summary of this period in artist’s career.
மேலதிகமாகத்தெரிந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும்...










































கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்