கலிலியோ vs மதவாதிகள்-02

ஒரு பொருளின் திணிவை அதன் கனவளவால் வகுத்தால் பொருளின் அடர்த்தி பெறப்பட்டுவிடும்.இதைப்பயன்படுத்தி கிரீடத்தின் அடர்த்தியைக்கண்டு அதை தங்கத்தின் அடர்த்தியுடன் ஒப்பிட்டால் தூய தங்கத்தால் கிரீடம் செய்யப்பட்டுள்ளதா அல்லது ஏதாவது மாசுக்கள் கலக்கப்பட்டுள்ளதா என்று கண்டுபிடித்துவிடமுடியும்.ஆனால் கிரீடத்தின் கனவளவை அளப்பதற்கு எந்தஉபகரணமும் இருக்கவில்லை.அவ்வாறு அளக்கவேண்டுமாயின் கிரீடத்தை அடித்து நொருக்கி ஒரு கோளப்பாத்திரத்தினுள் நிரப்பவேண்டும் அதற்கு மன்னர் சம்மதிக்கமாட்டார்.இன் நிலையில்தான் ஆக்கிடமிஸ் குளிப்பதற்காக தொட்டியினுள் இறங்கியபோது தொட்டியில் இருந்து  நீர் வெளியேறியது.உடனே ஆக்கிடமிஸ்ஸிற்குப்பொறிதட்டியது.வெளியேறிய நீரின் கனவளவும் அமிழ்த்தப்பட்ட பொருளின் கனவளவும் ஒன்று என அறிந்துகொண்டார் இதன் மூலம் கிரீடத்தின் கனவளவைக்கண்டு அடர்த்தியைக்காணமுடியும்.தங்கத்தின் அடர்த்தி ஏற்கனவே தெரியுமாகையால் கிரீடம் தூய தங்கத்தால் ஆனதா இல்லையா என்பதை இலகுவில் கண்டுபிடித்துவிடமுடியும்.இந்த விடயம் அரிஸ்டோட்டலுக்கு பளிச்சிட்டவுடன் நிர்வாணமாகவே குளியலறையில் இருந்து அரசசபைக்கு ஓடினார் யூரேக்கா யூரேக்கா என்று கத்திக்கொண்டு ஓடினார்(ஆக்கிமிடிஸ்ஸின் முறையின்படி கனவளவை அளக்கும் குடுவைகு யூரேக்கா கிண்ணம் என்று பெயர்வைத்துவிட்டார்கள்).இந்த சுவாரஸ்யமான கதையை கலிலியோ தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்,

அத்துடன் அரிஸ்ரோட்டலின் விதிகளில் உள்ள திருத்தங்களையும் வெளியிட்டார்.இவர் தந்து கொள்கைகள்,விளக்கங்களை கதைவடிவில் வெளியிட்டமை இவரது புத்தகங்கள் அதிகபிரபலமடையக்காரணமாக அமைந்தது.ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றவிடயங்களைபிழை என்று குறிப்பிடாமல் அவற்றுடன் தனது கருத்துக்கள் கொள்கைகளையும் மேலதிகமாக சேர்த்துவெளியிட்டமையால் கலிலியோவின் சமகால விஞ்ஞானிகளிடமும் புத்தகம் அதிகவரவேற்பைப்பெற்றது.

கலிலியோ vs மதவாதிகள்-01


இக்காலத்தில் செல்வந்தரான மார்க்விஸ் கலிலியோவிற்கு நண்பரானார்.இவரின் உதவியால் கலிலியோவிற்கு பட்டம் வழங்காது துரத்திய பல்கலைக்கழகத்திலேயே கணிதப்பேராசிரியராக கலிலியோவால் பதவி வகிக்கமுடிந்தது.இதன்பின்னர் கலிலியோ பைசா நகரிற்கு திரும்பி அரிஸ்ரோட்டலின் கொள்கைகளுக்கு எதிரான கருத்தை வெளியிடத்தொடங்கினார்.வெளிப்படையாக அரிஸ்ரோட்டலுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டமை கலிலியோவிற்கு அதிக எதிரிகளை சம்பாதித்துத்தந்தது.

பொருள்களின் விழுகைதொடர்பாக அரிஸ்ரோட்டில் கொள்கையை பிழைஎன்று கூறியது கலிலியோவின் எதிரிகளை வெகுவாகசீண்டிவிட்டது.கலிலியோ 1590 இல் அசைவுகள்,இயக்கம் பற்றிய demoto on motion என்ற தனது நூலை வெளியிட்டார்.அதில்தான் இது தொடர்பான கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.
அரிஸ்ரோட்டலின் கருத்துக்களில் ஒன்று வெவ்வேறு நிறையுடைய பொருட்கள் கீழே விழும்போது வெவ்வேறுவேகத்தில் விழும்.ஆனால் கலிலியோ பொருட்கள் எவளவு எடையைக்கொண்டிருப்பினும் ஒரே வேகத்துடனேயே விழும் என கண்டறிந்தார்.இதை கலிலியோ மட்டும் கண்டறிந்துவிடவில்லை ஏக காலத்தில் வேறுசில விஞ்ஞானிகளும் இதை அறிந்திருந்தார்கள்.பொருட்கள்கீழேவிழுதல் தொடர்பிலான கலிலியோவின் கொள்கைகளைக்கேட்ட பல்கலைக்கழத்தவர்கள் அரிஸ்ரோட்டலின் கொள்கைகள்தான் உண்மை என கலிலியோவுடன் விவாதத்திற்குவந்தார்கள்.இதற்கு முக்கியகாரணம் அரிஸ்ரோட்டலின் கொள்கைகள்பலவற்றைக்கொண்டு பைபிள் உருவாக்கப்பட்டிருந்தது.இதனால் கலிலியோ பரிசோதனை மூலம் நான் கூறியவற்றை நிரூபிக்கின்றேன் என்று கிளம்பினார்.கலிலியோவின் அம்முயற்சி வரலாற்றுச்சிறப்புமிக்க சம்பவமாக மாறியது.பரிசோதனைக்கு கலிலியோ தெரிவு செய்த இடம் பைசா சாய்ந்தகோபுரம்.பைசா சாய்ந்த கோபுரம் 1174ல் கட்டப்பட்டது.16 ஆம் நூற்றாண்டிலிருந்தே சுற்றுலாப்பயணிகளை கவர்ந்துவந்துள்ளது.

தமது மதத்தின் மீதிருந்த நம்பிக்கை,வெறிகாரணமாக கலிலியோவின் கூற்றுக்களை சிந்திக்ககூட மறுத்திருந்தார்கள்.
அரிஸ்டோட்டல் பொருட்களின் விழுகைபற்றி என்ன கூறினார்?(உண்மையில் புவியீர்ப்பின் கீழ் பொருட்களின் சுயாதீன  விழுகை என்றவசனத்தைத்தான் பாவித்திருக்கவேண்டும்.ஆனால் புவி ஈர்ப்பு என்றவிடயம் கலிலியோவிற்குப்பின்னர் வாழ்ந்த விஞ்ஞானியான  நியூட்டனால் அறியப்பட்டது.எனவே புவிஈர்ப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தமுடியாது.)

அரிஸ்ரோட்டல்கூறினார் எடைகூடிய,குறைந்த பொருட்களை ஒரே உயரத்தில் இருந்து கீழே சுயாதீனமாக  நழுவவிடும்போது.எடை கூடியது முதலில் கீழே விழும்.எடைகுறைந்தது சற்று நேரத்தின் பின்னரே தரையை அடையும்.இதை பிழை எனகூறிய கலிலியோவின் கருத்தை கண்மூடித்தனமாக எதிர்த்தமையால் கலிலியோ எரிச்சலின் உச்சிக்கே சென்றுவிட்டார்.மிகவும் கடுப்படைந்த கலிலியோ வெவ்வேறு நிறையுடைய 2 பீரங்கிக்குண்டுகளுடன் 176 அடியுடைய கோபுரத்தின் உச்சிக்கு ஏறினார்.பழையபடிகள்,வழுக்கல்கள்,களைப்பு,வியர்வை எவற்றையுமே அவர் பொருட்படுத்தவில்லை.கோபம்,பதட்டம் உச்சத்தில் இருந்தமையே இதற்குக்காரணம்.தான் மட்டும் மேலே செல்லவில்லை எதிர்பபளர்கள் சிலரை வற்புறுத்தி வலுகட்டாயமாக அழைத்துக்கொண்டு 176 அடிகோபுரத்தின் உச்சிக்கு சென்றார்.

பைசாக்கோபுர உச்சிக்கு சென்றதும் 2 சக ஊழியர்களிடம் பீரங்கிக்குண்டுகளைக்கொடுத்து தான் சைகைசெய்ததும் கீழே விடும்படி கூறினார்.கலிலியோ சைகைசெய்ததும் அவர்கள் குண்டுகளை கீழே விட்டனர்.அவை ஒரே நேரத்தில் தரையை அடைந்தன.இதன் மூலம் கலிலியோவின் கருத்து சரியானது என அனைவருக்கும் தெளிவானது.காற்றுத்தடை இப்பரிசோதனையில் தாக்கம் செலுத்துவதை கலிலியோ அறிந்திருந்தார்.அதனால் பரிசோதனையின்போது காற்றுவீசும் வேகத்தில் கவனத்தைசெலுத்தியே பரிசோதனையை மேற்கொண்டார்.
ஆனால் முறையான பரிசோதனை செய்யப்பட்டது 50 ஆண்டுகளின் பின் 1642 இல் ரொபேட் பொயில்ஸ் என்ற விஞ்ஞானியினால்தான்.விஞ்ஞானி பொயில் இது தொடர்பான பரிசோதனைகளைபின்வருமாறு செய்தார்.ஒரு கண்ணாடிக்கூடிற்குள் இருக்கும் வளியை அகற்றியபின்னர் அதனுள் ஒரு ஈயக்குண்டையும்,இறக்கையையும் ஒரே கணப்பொழுதில் விடுவித்தபோது அவை கண்ணாடிக்கூடின் அடியை அடைவதற்கு ஒரே அளவான நேரத்தை எடுத்துக்கொண்டன.

ஆனால் இவற்றை வாசிக்கும்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும்(வரவேண்டும்).ஒரு கிலோ நிறையை உடைய பஞ்சு,ஒரு இரும்புத்துண்டை ஒரே உயரத்திற்குப்பிடித்துவைத்திருந்துவிட்டு கீழே விட்டால் ஒரே நேரத்திலா கீழே விழும்.இரும்புத்துண்டு கையைவிட்ட மாத்திரத்திலேயே தரையை அடைந்துவிடுமே?


இது ஒரு குழப்பமான விடயம்தான் ஸ்கொலர்ஸிப்பிற்குப்(தரம் 5)படிக்கும்போது கேள்விகேட்டார்கள்.ஒருகிலோ இரும்பா ஒரு கிலோ பஞ்சா நிறை அதியகம் என்று? ஒரு கிலோ இரும்பு என்றுகூறி தலையில் குட்டுவாங்கியது நினைவிருக்கின்றது.ஒரு கிலோ இரும்பு என்பது கைக்கு அடக்கமாகக்கூடியது.ஆனால் ஒருகிலோ பஞ்சையும் கைக்கு அடைக்கமாக நினைப்பதால்தான் இந்தகுழப்பம் அப்போது தோன்றியது ஒருகிலோ பஞ்சு கைக்குள் அடங்காது ஒரு பையேவேண்டும்.
உண்மையில் இப்பிரச்சனைக்குவருவோம்.10 மீட்டர் உயரத்தில் இருந்து.ஒருகிலோ பஞ்சு,ஒரு கிலோ இரும்பை கீழே விட்டால் எது முதலில் தரையை அடையும்.
பொருள் கீழே விழுதலில் காற்றுமுக்கியதடையை ஏற்படுத்துகின்றது.காற்று ஏற்படுத்தும் தடையில் முக்கியபங்கு செலுத்துவது கீழே விழும் பொருளின் பரப்பளவு.
எந்தப்பொருளும் கீழே விழும்போது அப்பொருளின்பரப்பளவுகாரணமாக காற்று தடையை ஏற்படுத்தும்.இதை பரிசோதிக்க(பொருளின் பரப்பளவு) இலகுவான பரிசோதனை ஒன்று இருக்கின்றது.ஒரளவு பெரிய நோட்புக்கை சுருட்டி வைத்துக்கொண்டு வேகமாக அசையுங்கள்(பட்டிங்க் செய்வதுபோல்)..பின்னர் அதே நோட் புக்கை சுருட்டாமல் வைத்துக்கொண்டு அதேபோல் அசையுங்கள்பார்க்கலாம்.அது கடினமாக இருக்கும்.இங்கு என்ன நடந்தது? காற்றுடன் தொடுகையுறும் பரப்பளவு அதிகரித்தது சோ தடை அதிகரித்தது.எனவே பொருள் செல்லும் வேகத்தை காற்று( பொருளின் பரப்பளவின் காரணமாக )தடையை ஏற்படுத்தி(அதை உராய்வு என்று அழைப்பார்கள்) குறைத்துவிடும்.

ஆக காற்று பொருளின்  வேகத்தில் தடையை ஏற்படுத்துகின்றது.

சரி சப்போஸ் சந்திரனில் இதே போல் வேறு வேறு நிறையுடைய பொருட்களை விழவிடுவோம்...ஒரு யானையையும் ஒரு எறும்பையும் 40 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழவிட்டால் எது முதலில் தரையை அடையும்? என்று கேட்டால் இரண்டுமே ஒரே நேரத்தில் தரையை அடையும் காரணம் சந்திரனில் காற்றுமண்டலம் இல்லை எனவே காற்று தடையை ஏற்படுத்தாது....ஆனால் யானை விழுவதற்கும் எறும்புவிழுவதற்கும் ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும்...எங்கேயோ உதைக்கின்றதே என்று கேட்டால்... உந்தம் என்ற விடயம் இருக்கின்றது ... ஒரு பொருளின் ,வேகம்* பொருளின் திணிவு=உந்தம்( momentum ) P=mv, யானை கீழே விழும்போது அதிக உந்தத்துடன் தரையை அடையும் எறும்பு குறைந்த உந்தத்துடன் தரையை அடையும்.இதுதான் அந்தவித்தியாசம்.

இப்பரிசோதனை கலிலியோவுக்குவெற்றியைக்கொடுத்தாலும் துன்பமே வந்துசேர்ந்தது.இவர் அரிஸ்ரோட்டலின் கருத்துக்களைப்பிழையாக்கினார் பைபிள் அரிஸ்ரோட்டலின் கருத்துக்களையும் உள்வாங்கி இருந்ததால் பலத்த எதிர்ப்புக்கிளம்பியது.(எதைவிடவும் மதம் முக்கியம் சாரே)இதன் காரணமாக பல்கலைக்கழகம் இவரது வேலைக்கான ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்தது இதனால் கலிலியோவேலை இழந்தார்.
 இன் நிலையில் அடுத்தஇடிவிழுந்தது கலிலியோவின் தந்தைவின்சங்கியோ மரணமடைந்தார்.இவர் இசைமூலம் சம்பாதித்தபணத்தை மற்றவர்த்தக நடவடிக்கைகளில் போட்டு பணத்தைசெலவழித்திருந்தார் கலிலியோவின் சகோதரிக்கு அதிக சீதணம் அளிப்பதாக கணவருக்கு வாக்குறுதிகொடுத்திருந்தார் ஆனால் அதற்குள் இறந்துவிட்டார். இன் நிலையில்தான் பல்கலைக்கழகமும் கலிலியோவைக்கைவிட்டிருந்தது.

இச்சந்தர்ப்பத்தில்தான் கலிலியோவின்  நண்பர் மார்குவிஸ் மீண்டும் உதவிசெய்தார் முந்தயதைவிட 3 மடங்குஅதிக சம்பளத்துடன் பாடுவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணைக்கப்பட உதவி செய்தார் நண்பர். அந்த நண்பருக்கு 16 000 புத்தகங்களைக்கொண்ட நூலகம் ஒன்று சொந்தமாக இருந்தது அதை கலிலியோ நன்றாகப்பயன்படுத்திக்கொண்டார். நண்பர் பிலோனி பாடுபாவின் மிகப்பெரும் செல்வந்தர் இதனால் பாடுபாவின் செல்வாக்குமிக்க பிலோனி சமூகத்தில் இணைவதற்கான வாய்ப்பு கலிலியோவிற்குக்கிடைத்தது.விரைவில் அச்சங்கத்தின் முக்கிய உறுப்பினரானார்.இதனால் வேறு பல செல்வந்தர்களையும் நண்பர்களாக சம்பாதித்துக்கொள்ளமுடிந்தது.இப்படிக்கிடைத்த செல்வந்த நட்புக்களுக்கிடையிலான ஒற்றுமைஎன்னவென்றால் அனைவரும் அறிவியல் வேட்கைகொண்டவர்கள். இந்த நண்பர்கள்தான் பின்னாளில் மரண தண்டனையில் இருந்து கலிலியோவைக்காப்பாற்றினார்கள்.
கலிலியோவின் வாழ்க்கைத்தரம் சற்று உயர்ந்தது சொந்தமாக சிறியவீடு ஒன்றைக்கட்டினார்.கலிலியோவின் வாழ்க்கையிலும் காதல் மலர்ந்தது மரினா என்ற பெண்ணுடன் கலிலியோபழகத்தொடங்கினார். இருவருக்கும் 2 பெண் 1 ஆண்குழந்தைகள் பிறந்தார்கள் ஆனால் இருவருமே இறுதிவரைதிருமணம் செய்துகொள்ளவில்லை.காரணம் கலிலியோ அதிகம் காதலித்தது அறிவியலைத்தான் இதனால் கலிலியோவை நல்ல கணவராகவோ தந்தையாகவோ கொள்வதுகடினமான ஒன்று.

ஒரே நேரத்தில் பொருட்கள் விழுதல் பற்றியபரிசோதனைகளில் காற்றுத்தடை,சரியான கடிகாரம் இன்மைபோன்றன பரிசோதனைக்குறைபாடுகள்தான்.  நாடித்துடிப்பை கடிகாரமாகப்பயன்படுத்தல் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
பொருட்களை உயரத்தில் இருந்து கீழே நழுவவிட்டதுபோல் சாய்தளங்களிலும் கலிலியோபொருட்களை  நழுவவிட்டுப்பார்த்தார்.ஆனால் சாய்தளங்களில் நழுவவிடப்பட்ட பொருள் அடித்தளத்தை அடைய அதிக  நேரம் எடுத்தது.இதற்குக்காரணம் உராய்வு.உராய்வு இல்லையாயின் இரண்டுமே ஒரே நேரத்தில் தரையைஅடைந்திருக்கும்.பொருட்களை ஒரே  நேரத்தில் கீழே  நழுவவிடலில் உள்ள சிக்கல் நேரத்தைக்கணிப்பது.176அடி உயரத்தில் இருந்து பொருளைக்கீழே நழுவவிட்டாலும் குறைவான நேரத்தில் பொருள் தரையை அடைந்துவிடும்.எனவே இவர் இதற்காகக குறைபாடுள்ள ஆனால் ஓரளவு திருத்தமான வழி ஒன்றப்யன்படுத்தினார்.அடியில் துளைகொண்ட ஒரு தண்ணீர்பீப்பாவைப்பயன்படுத்தினார்.அத்துளையினூடாக வெளியேறும் நீர் ஒரு முகவையினுள் சேகரிக்கப்படும்.வெவேறு பொருட்கள் போடப்படும்போது சேகரிக்கப்படும் நீரின் அளவுகள் ஒப்பிடப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

கலிலியோவின் பைசாக்கோபுரப்பரிசோதனையின்போது பொருட்கள் மாறாவேகத்தில் தரையை அடைந்தன என  நம்பினார்கள் மக்கள்.ஆனால் அது தவறு படிப்படியாக வேகமடைகின்றன என நம்பினார் கலிலியோ.இவரது எண்ணம் ஆர்முடுகல் என்ற கணியம் தோன்றஅடிப்படையாக  அமைந்தது.(உண்மையில் ஆர்முடுகல் பற்றிய முழுமையான கருத்துக்கள் கோட்பாடுகள் கலிலியோவின் பின்னர் வந்த நியூட்டனால் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது ஆனால் கலிலியோ உணர்ந்திருந்தார்)
இதைப்பரிசோதனைமூலம் செய்துபார்க்கவிரும்பினார் கலிலியோ.பந்து ஒன்றை சாய்தளத்தில் 8,18,32 அடிகள் தூரத்தில் இருந்து கீழே உருளவிட்டார்.

0-8,8-18,18-32 அடிகளைக்கடக்க எடுக்கும்  நேரங்களை அளவிட்டார் 18-32 அடிகளை கடக்க எடுக்கும் நேரம் மிக குறுகிய நேரமாக இருந்தது.எனவே வேகம் கீழே வர வர அதிகரிக்கின்றது என  நிரூபனமானது.
கலிலியோவின் இவ்வாறான கண்டுபிடிப்புக்கள் பெரும்பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தன அப்போது கலிலியோ இராணுவ அதிகாரிகளுக்கு கணக்கிடும் இயந்திரங்களை உருவாக்கி பணம் ஈட்டிக்கொண்டிருந்தார் இதன் பெறுபேறாக எறி குண்டுகள்,உந்தம் பற்றிய எண்ணக்கருக்கள் கலிலியோவிற்குத்தோன்றியது.

ஆனால் இவ் எண்ணக்கருக்கள் மீண்டும் பழமைவாதத்துடன்/அரிஸ்ரோட்டலுடன் மோதும் கட்டாயத்தை ஏற்படுத்தியது.மரபுவழியாக நம்பப்பட்டுவந்த இயல்பியல் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு பொருளில் ஒரு விசைமட்டுமே தாக்கும் எனக்கூறியது.ஆனால் ஒரு சந்தர்ப்பத்தை உதாரணமாகக்கொண்டு அது தவறானது எனக்கலிலியோ எடுத்துரைத்தார்.ஒரு கப்பலில் பிரயாணம் செய்யும்போது ஒரு பாய்மரத்தின் உச்சியில் இருந்து ஒரு பந்தைக்கீழே போட்டால் அது பாய்மரத்தின் அடியை அடையும் எனவே கப்பல் எந்த அசைவை உணர்கின்றதோ அதைத்தான் பந்தும் உணர்கின்றது எனக்கூறினார்.


தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்