நாத்திகன் முட்டாள்? புத்திசாலி?



 என் வயதினர் தரம் 8,9 இல் சமய பாடங்களைக்கற்கும்போது சித்தர்களைப்பற்றிய அறிமுகம் சமயபாடத்தின் வழியாகக்கிடைத்தது. அந்த வயதுவரை எமது வயதினரின் உலகத்திற்கு அதிசயங்கள் ஆச்சரியங்கள்  விஞ்ஞான பாடரீதியாக கிடைக்கவில்லை விஞ்ஞானம் என்பது தாவர விலங்குக்கலங்கள் தொடர்பான விடயங்களை மனப்பாடம் செய்தல்,எலக்ரிசிற்றி தொடர்பான கடினமான கணக்குகள்(அப்போது மிக கடினமாக இருந்தது) ரான்ஸிஸ்ரர்கள் இதயம் கிட்னி போன்றவைதான் சயன்ஸ் பரிமானம் தொடர்பாக சிலவிடயங்கள் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டன.மனிதன் குரங்கின் கூர்ப்பின் இறுதிவடிவம் எமது மூதாதையர் குரங்கு அப்படின்னா என்ர தாத்தா பூட்டன் என்று பின்னே சிந்தித்தால் 123455 ஆவது நபர் ஒரு குரங்கா? ஆம் என்கின்றது பரிணாமம் சிறியவயதிலும் ஏன் இப்போதுமே குரங்கு என்ற  ஏசுவது வழக்கில் உள்ளதாலோ என்னவோ மூதாதையர்கள் குரங்கு என்பதை ஏற்றுக்கொள்வதில் அவளவு கடினம் இருந்தது ஆனால் சயன்ஸ் ஆயிற்றே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 8,9 தரங்களில் சமயத்திற்கும் சயன்ஸிற்கும் அவளவு வேறுபாடுகள் இல்லை இரண்டுமே தகவல்களைத்திணித்தன சம்பந்தர் பாடியதேவாரம் நினைவிருக்கவேண்டும் எக்ஸாமிற்கு வரும் அதே நேரம்  காற்றுசுவாசத்திக் குளுக்கோள் ஏ.ரி.பியாக மாறுவது தொடர்பான சக்கரங்களும் நினைவிருக்கவேண்டும் ஆனால் இவை ஏன் எமக்கு நினைவிருக்கவேண்டும்  என்ன காரணம்? காரணம் சிம்பிள் நல்ல மார்க்ஸ் எடுக்கவேண்டும் அவளவே.என்வே நோர்மலான எந்த சைல்டிற்கும் சமயமோ,விஞ்ஞானமோ மதமாகவே போதிக்கப்பட்டன அது தொடர்பான ஆராய்ச்சிகள் அவர்களது வயதுக்கு அப்பாற்பட்டவையாகவே இருந்தன அதோடு ஆராய்ச்சிகளூடான கற்பித்தல் தொடர்பில் எமது எடியுகேஸன் சிஸ்ரம் இல்லை.

எனவே இரண்டையும்  மனப்பாடம் செய்தோம் எம்மால் முடியுமான புள்ளிகளைமட்டுமே பெற்றுக்கொண்டோம்.படிக்கும் பாடங்கள் தொடர்பிலான எந்த ஆச்சரியங்களையும் அப்போது சந்தித்தது கிடையாது ஆனால் முதல் முதலில் ஆச்சரியங்களை எமக்கு அறிமுகப்படுத்தியது சமயபாடம்.சைவ நெறி அதுவேதான் எம்மை ஆச்சரியப்படுத்துவதில் சயன்ஸைவிட சமயம் அப்போது முந்திக்கொண்டது சயன்ஸ் பிந்திக்கொண்டமைக்கும் காரணம் இருக்கின்றது 8,9 ஆம் தரங்களில் ஏன் தரம் 1, தரம் 2 இலேயே சமயம் தன்வேலையை காட்ட ஆரம்பித்துவிடும் சமயத்தை விளங்குவதற்கு எந்த அடிப்படை அறிவும் தேவையே இல்லை ஏனென்றால் அங்கே நாயன்மார்களின் வரலாறுகள் கடவுள்கள் அவர்களில் முதலாவது இரண்டாவது மனைவிகள் கடவுள்களின் கள்ளத்தொடர்புகள் பக்தர்கள் போன்றவர்களின் வரலாறுகள் மட்டுமே சமயபாடங்களாக இருந்தன.

தரம் ஒன்றில்  கையைப்பிடித்து ஒரு அழகான ரீச்சர் "அ" "ஆ" என்று கத்தி கத்தி சொல்லி நாம்  அ,ஆ எழுத ஆரம்பித்த காலத்திலேயே கடவுள் எங்கும் இருக்கின்றார் கடவுள் எல்லாம் வல்லவர் என்பதில் ஆரம்பித்து இறைவனின் எண்குணங்கள் வரை படித்தவர்கள் நாம்.12 வயதுவரை ஒரு குழந்தையின் வாழ்க்கையில் அது பார்க்கும்,கேட்கும்,அனுபவிக்கும் அனைத்துவிடயங்களும்தான் அவனை எதிர்காலத்தில் அவன் குண இயல்பைத்தீர்மானிக்கின்றது அதாவது 12 வயதுக்குக்குறைவான சிறுவனின் மனது ஒரு பிளாங்க் பேப்பர்.ஆனால் அதில் வரையப்பட்டவைகள் தமிழ்,கணிதம்,சமயம் இவற்றுள் முக்கியமான மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்துவது சமயம்தான்.சாமி கண்ணைக்குத்தும் என்பதில் இருந்து இவை ஆரம்பிக்கின்றன.வளர்ந்துவரும் குழந்தைகளை அவதானித்திருப்பீர்கள் ஒரு கட்டத்தில் அவர்களுடன்  நேரத்தை செலவிடுதல் என்பது மிகவும் கடினமான ஒரு காரியமாகிவிடும்...அப்பா ஏன் காகம் கறுப்பு? ஏன் பறக்குது? ஏன் நிலா இரவில ஓடுது? நான்கள் போகும்போதும் ஏன் சூரியன் கூடவே வருது? இதற்கெல்லாம் உண்மையான பதில்களை அந்தவயதில் கூறமுடியாதுதான் ஆனால் குழந்தை தன் சூழலை தெளிவாக அவதானிக்க ஆரம்பித்ததன் அடையாளங்கள் இவை.இந்தக்கேள்விகள் அப்படியே இப்படி மாறும்....கோவிலுக்கு சென்றதும் கடவுள் இருக்கிறாரா? நீ பாத்திருக்கிறியா அம்மா? ஏன் பால் ஊத்தினம்? ஏன் தேங்காய் வேண்டுறாய்? ஏன் தேர் இழுக்கினம்? என்று குழந்தை ஆரம்பித்துவிடும். வழமையான மேற்கூறிய சாதாரண கேள்விகளுக்கு ஏதாவது பதில் கூறும் நாம் கடவுள் தொடர்பான கேள்விகளைக்கேட்க ஆரம்பித்ததும் நமது ரியாக்ஸன் அறவே மாறிவிடுகின்றது.ஒன்று வாயில் தட்டிவிட்டு சாமி கண்ணைக்குத்திடும் என்று பயமூட்டுவது கடவுள் தொடர்பான பயமூட்டல்கள் இந்தவகையில் ஆரம்பிக்கின்றன.பெற்றோர்கள் இதைசெய்யாமல் விட்டாலும் வேறு பெரியவர்கள் நிச்சயம் இதைசெய்வார்கள்.கடவுள் என்ற திங்கின்மீதான பயம் என்பது இந்தவயதில்  நன்றாகவே வெற்றிகரமாக விதைக்கப்பட்டுவிடப்படுகின்றது.

ஆரம்பத்திலேயே எமக்கு சமயங்கள் ஆச்சரிங்களை அறிமுகப்படுத்துகின்றன.சம்பந்தர் செங்கட்டியை பொன்கட்டியாக்குதல்,கல் மிதத்தல்,பாம்புகடித்தவரை தேவாரம் பாடி எழுப்புதல் இவைபோக சிறுவர்கள் இவ்வயதில் நன்றாக கதைகள் கேட்பதில்,சொல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவர் சோ அதற்கு ஏற்றவகையில் ராவணன்,ராமன்,குரங்கு உருவில் அனுமன் மலையை தூக்கி சென்றது பறக்கும் புஸ்பகவிமானங்கள் ,போர்கள் சபதங்கள் என மிக சுவையான கதைகளால் சிறுவர்களின் மனது நிறைக்கப்படுகின்றன.இப்படியான அப்னோர்மல்களை நம்புவதற்குத்தான் அந்தவயது விரும்பும்.நம்பவும் செய்யும்.சமயம் தொடர்பான இவ்வாறான ஆச்சரிங்களுக்கும் அதிசயங்களுக்கும் ஏன் எதற்கு என்ற கேள்விகளோ மாற்றுக்கருத்துக்கள் தொடர்பான சிந்தனைகளோ அப்போது யாருக்கும் கிடையாது என்பது உண்மை.சோஇவற்றினூடாக சமயம் ஒரு மனிதனின் மனதில் மிக ஆழமாகப்பதியவைக்கப்பட்டிருக்கின்றது என்பது உண்மை.எனவே கடவுள் இருக்கோ இல்லையோ தவறு செய்யும்போது கடவுளால் தண்டிக்கப்பட்டுவிடுவோம் என்றபயம்,கடவுளைப்பற்றிய மாற்றுக்கருத்துக்கள்,ஆராய்தல்கள் தெய்வகுற்றங்களாக தண்டனைக்குரியகுற்றங்களாக  நிச்சயம் இவற்றால் விதைக்கப்பட்டுவிடப்படுகின்றது.இதுதான் அந்த கடவுள்பயத்தின் மீதான வேர்.

உயர்தரக்கல்வியில்கூட பரிமானம் தொடர்பான நோட்ஸ்கள்தான் வழங்கப்படுகின்றன.எனவே மனனம்செய்தல் என்பது எப்போதுமே தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. நாம் பெற்றுக்கொண்ட அறிவை பரிசோதிக்கும் தர்க்கத்துக்கு உட்படுத்தும் சந்தர்ப்பங்களை நாம் பெற்றுக்கொள்ளல் என்பதற்கான நிகழ்தகவு மிகமிகக்குறைவாகவேகாணப்படுகின்றது.ஒருவகையில் பார்த்தால் சமயத்திற்கும் சயன்ஸிற்கும் பெரியவேறுபாடு கிடையாது இரண்டுமே அண்ணளவாக மதங்களே...

மீட்டர் என்றால் என்ன என்றுகேட்டால் உங்களிடம் பதில் இருக்கின்றதா?அனைவரும் ஏற்றுக்கொண்ட நியம அளவுகள் மீட்டர் கிலோகிராம்(இவற்றை அமெரிக்கா பயன்படுத்துவதில்லை என்பதுவேறுகதை)..இது நியமமாம பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு முழம்,சாண் என்பவை வழக்கில் இருந்தன.ஆனால் அவை நியமம் அல்ல எனது கையின் அளவும் இன்னொருவரின் கையின் அளவும் ஒரே பரிமாண அளாவுகளில் இருக்காது என்பதால் இதில் சிக்கல்கள் இருந்தன.அளவுள் தொடர்பாக கூறுவதால் இதையும் கூறவேண்டும்.

தமிழனின் பெருமைகள் தொடர்பில் பின்வரும் எண்ணிக்கைதொடர்பான ஒருவிவரம் பேஸ்புக்கில் பெருமளவாக பகிர்ந்துகொள்ளப்படுகின்றது.

௱௫௰௬ = 156
௲ =1000
௲௧= 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (லட்சம்)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (பத்து லட்சம்)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (கோடி)
௰௱௱௲ = 100,000,000 (பத்து கோடி)
௱௱௱௲= 1,000,000,000 (நூறு கோடி)
௲௱௱௲ = 10,000,000,000 (ஆயிரம் கோடி)
௰௲௱௱௲ = 100,000,000,000 (பத்து ஆயிரம் கோடி)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (லட்சம் கோடி)
௱௱௲௱௱௲= 100,000,000,000,000 (கோடி கோடி)

இதில் எனக்கு இருக்கும் சந்தேகங்களை தெளிவுபடுத்தினால் ஓகே பில்லியன்,ரில்லியன் எல்லாம் வழக்கில் இருக்கின்றது காரணம் இவற்றின் பயன்கள்,பூமியின் ஆயுள் ,சூரியனின் ஆயுள் நட்சத்திரங்களின் சராசரி எண்ணிக்கை என்பவற்றிற்கு இவை பயன்படும் ஆனால் மேல் கோடி கோடி,லட்சம் கோடி என்றெல்லாம் கூறுகிறார்களே.இவை உருவாக்கப்பட்டகாலத்திலோ அல்லது இப்போதோ இவற்றின் பயன் என்ன? எதற்காக உருவாக்கினார்கள்? இப்போதைய சயன்ஸ் ரெக்னோலஜியுலேயே ஒரு அளவிற்கு அப்பால் எண்ணிக்கையை பரிசோதனை ரீதியாக அறிதல் இயலாதது என்று ஆகிவிட்டது.முதலில் இவ்வாறானவற்றைக் கணிப்பதற்கு அப்படியான பொருட்கள்வேண்டுமே 

மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்கின்றேன்.பிஸிக்ஸ் என்றால் என்ன என்றுகேட்டால் அளவீடுகள் என்றபதிலில் இருந்து உருவாக்கப்படுகின்றது பிஸிக்ஸ்,பயோலொஜி அவதானிப்புக்கள்,பரிசோதனைகள்,மற்ஸ் எண்கள் என்றால் என்ன ஏன் என்றால் விளக்கம் கூறமுடியுமா? எல்லாம் நாம் எமக்காக உருவாக்கியவைதான்.சிந்தித்தால் எம்மைவிட்டு வெளியே எம்முடன் தொடர்பில் உள்ள அத்தனை பொருட்களையும் எமக்குப்பழக்கப்படுத்திய பொருட்களாக மாற்றிவிடுகின்றோம்/எமக்கு பழக்கப்படுத்திக்கொள்கின்றோம்.இது நடைபெறவில்லையாயின் அப்பொருள் மீதான பயம் மிரட்சி ஏற்பட்டுவிடும்.இதுவரை வாழ்க்கையில் நீங்கள் அவதானித்திராத ஒரு பொருளை அவதானிக்கும்போது குழப்பம் ஏற்படும் மீண்டும் அதேபொருளை சந்திக்கும்போது அது எம்முடன் இணைந்துவிடும்.சயன்ஸ் என்ற தோற் உருவானவிதம் இப்படியாகத்தான் இருக்கின்றது.சமயத்தைப்பற்றி எதுவும் கூறவே தேவையில்லை.

அப்படியானால் ஒன்றுமட்டும் உண்மை  நாம் தனிமையாக்கப்பட்டிருக்கின்றோம் பிரபஞ்ச தனிமை. நாம் எமக்காக உருவாக்கிய சமயம் சயன்ஸ் இரண்டையும் கொண்டு அந்த தனிமையில் இருந்து எம்மை விடுவித்துக்கொண்டுவிட்டதாக திருப்திப்பட்டுக்கொள்கின்றோம் அவளவுதான்.ஆனால் இரண்டிலும் ஒப்பீட்டு ரீதியில் பில்லியன் மடங்கால் சயன்ஸ் உயர்ந்துதான் நிற்கின்றது.வாழ்க்கைத்தொடர்ச்சிக்கு உதவிக்கொண்டுதான் இருக்கின்றது.

எனது  தந்தை ஆத்திகர் அவரது வயது 54 அவரை என்னால் எளிதில் கடவுள் தொடர்பான வாதத்தில் தோற்கடிக்கமுடியும்.அவருக்கு பரிணாமமோ,பிக் பாங்கோ தெரியாது ஏன் அவர் நம்பும் சமயம் தொடர்பான இதிகாசபுராணங்கள் வேதங்களையும் அவர் படித்தது கிடையாது அனேக மக்களைப்போலவே அவருக்கும் அதைப்படிக்கவேண்டிய  தெரிந்திருக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை..
பல தடவைகள் வாழ்க்கையில்பல கஸ்ரங்களை அனுபவித்திருக்கின்றார்.அவற்றைகூறியிருக்கின்றார் ஆனால் கூடவே கூறுவார் கடவுள்தான் காப்பாற்றினார் என்று.
 நான் விரும்பினால் அவரது கடவுள் தொடர்பான அவரது நம்பிக்கையை சிதறடித்திருக்கு முடியும் ஆனால் செய்யவில்லை.(சில பல தடவைகள் நக்கலாக விவாதித்திருக்கின்றேன் கோபமடைந்திருக்கிறார் அப்படியே மேட்டரைவிட்டுவிடுவேன் இப்படியும் நடந்திருக்கின்றது வாய் சும்மா இருக்குதில்லையே) காரணம் அவரது  40,50 வருட நம்பிக்கையை நான் நிர்மூலமாக்க விரும்பவில்லை,அவர் கரையேற உதவுவதற்கு ஊக்கத்தையும் தாங்கும் தன்மையையும் மன வலிமையையும் கொடுத்த அந்த நம்பிக்கையே தொடர்ந்து அவர் பயணத்தை முடிக்கும்வரை உதவியாக இருக்கட்டும் என்று ஒதுங்கிவிட்டேன்.

நாத்திகம் தொடர்பான தோற்கள் மனதில் தோன்றஆரம்பித்ததும் கேள்விகள் எழ ஆரம்பித்ததும் திரு நீறு அணிவதில்லை பொட்டு அணிவதில்லை கைகால்களில் நூல் அணிவதில்லை வெள்ளிக்கிழமை மச்சம் சாப்பிடுவது என்று  ஒரு லிஸ்ரே போட்டாகிவிட்டது.இப்போதும் தொடர்வதுவேறுகதை ஆனால் ஆரம்பத்தில் ஒன்று செய்தேன் எனக்கு யாராவது திரு நீறு அணிவித்தால் அழித்துவிடுவேன்.

ஆனால் கமல் ஒருதடவை கூறினார்(நாத்திக தோற்றினால் கமலையும் பிடித்துவிட்டது) நான் நாத்திகன் ஆனால் எனது மகள் ஆத்திகம் பழகினால் அது அவரது சுதந்திரம் அவர் எனக்கு பொட்டுவைத்தால் நான் அதை அழிக்கமாட்டேன் அது அன்பால் வைத்தபொட்டு.அன்புதான் கவனிக்கப்படவேண்டியது.இந்த வசனங்கள் பளார் என்று அறைந்தது.
அன்பேசிவத்தில்...யார் என்றே தெரியாத ஒரு பையனுக்காக அழுற மனசிருக்கே அதுதான்சேர் கடவுள்.....அப்படியான கடவுள்களாக நாம் இருந்துவிட்டுசெல்வோம்.


நாத்தீகர்களிடம் சரி பகுத்தறிவாளிகளிடம் 2 வகை ஒன்று வலு கட்டயமாக கடவுள் இல்லை ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்கக்கூடாது இல்லையென்றால் இல்லைத்தான்.சரியாக ஆத்திகர்களின் வழி இதேதான்,மற்றையது ஏதோ இருக்கும் அறிவைவைத்துக்கொண்டு தம்மைத்தாமே கேட்கும் சில கேள்விகளால் தூண்டப்பட்டவர்கள்.கடவுள் என்பவர் அனைத்தையுமே ஆட்சி செய்பவரானால் அவர் ஒரு அரசன்.ஆனால் உலகில் நடக்கும்  சம்பவங்களைப்பார்த்தால் நாம் ஒரு ஒழுங்கான அரசனின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படவில்லையே.
கண்ணுக்குக்கண் தலைக்கு தலை என்பது காட்டுமிராண்டித்தனம் என மனிதர்களாகிய நாம்தான் சொல்கின்றோம். ஆனால் ஒரு குழந்தை ரயிலில் அடிபட்டு இறந்தால் போன ஜென்மத்தில என்ன பாவம் பண்ணிச்சோ யாராவது விபத்தில் இறந்தாலும் அதையேதான் சொல்கின்றார்கள்.மனிதர்களாகிய நாமே தலைக்குத்தலை என்பதை காட்டுமிராண்டித்தனம் என்று கூறினால்   ஆத்திகர்கள் கூறிய இயல்புகளைக்கொண்ட கடவுளுக்கு இது முற்றிலும் முரணாக இருக்கின்றதே....இப்படி பல கேள்விககளால் மாறியவர்கள்.பொதுவாக பகுத்தறிவாளர்களை புத்திசாலிகள் என பொதுவான அபிப்பிராயம் இருப்பதற்கு காரணம் அவர்களது பரிசோதிக்கும்,ஆராயும் இயல்புகள் பரிமாணம்,பிக் பாங்க்,போஸன் என்று பல விடயங்கள் அவர்களது துறைக்கு சம்பந்தமில்லாத பல துறைகளில் அவர்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கும் ஆனால் ஆத்திகர்களால் கீதையையோ பைபிளையோ,குர்ரானையோ தாண்டமுடிதல்கடினம்(இது பொதுவான போக்கு சகல சமயங்களிலும் பிரபல விஞ்ஞானிகள் ஆத்திகர்களாக இருந்திருக்கின்றார்கள். நான் கூறுவது சாமானியர்களின் பொதுவான போக்கு)

 ஒரு நம்பிக்கையை அழித்தால் அதைவிட மேலான ஒரு நம்பிக்கையை அல்லது அதற்கு சமனான ஒரு நம்பிக்கையை அவருக்கு கொடுக்கவேண்டும்.மத  நம்பிக்கையை அழித்துவிட்டால் அதற்கு சமனான அல்லது அதற்கு மேலான ஒரு நம்பிக்கையை வேறு எதனாலாவது கொடுக்கமுடியும் என்று நம்புகின்றீர்களா? எனது பதில் இல்லை என்பதுதான் சிறியவயதில் இருந்து விதைக்கப்பட்ட பயத்தாலான அந்த  நம்பிக்கையின் காரணமான பிரதிபலிப்புக்கள் ஊக்குவிப்புக்களை வேறு எதனாலும்  ஆத்திகனுக்கு வழங்கமுடியாது பல இடங்களில் ஆத்திகன் சம்பந்தமில்லாமல் கதைத்து தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமைக்கு இதுதான் காரணம் தான் இதுவரை நம்பிவந்த துடுப்பு உண்மையில் பயனற்ற எதுவே இல்லாதது என்பதை ஏற்றுக்கொள்வது தொடர்பான பயம் அது.
எனவே நாத்திகர்களுக்கு இருக்கும் கடமை இதுதான் என நான் நம்புகின்றேன்.உங்களால் ஆத்திகனின் நம்பிக்கைக்கு மேலான நம்பிக்கையை வழங்கமுடியுமானால் அவனது நம்பிக்கையை சுக்கு நூறாக்குங்கள்...இல்லையெனில் அவனது பார்வையில் முட்டாளாகவே இருந்துவிட்டுப்போவோமே?

ஒருவனது பலவீனத்தை மதிக்கவேண்டுமல்லவா?



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்