இடுகைகள்

பிப்ரவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சவபுராணம்

படம்
எல்லாம் வல்ல இறைவர் தலைவன் சிவனின் விரதத்தை நோற்கிறோம் நாம். கேதீச்சரத்துக்கும் கோனேஸ்வரத்துக்கும் முன்னால் புதைகுழிகளை வெளிக்காட்டி தவறிழைத்தவர்களை நின்று கொல்லும் ஐநாவுக்கூடாக தண்டிக்கத்தான் இறைவன் முன்னொருநாளில் அத்தனை அப்பாவிகளையும் துப்பாக்கி முனையில் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டு மானம் பிடுங்கப் பட்டு புதைக்கப்பட வைத்தான் என்பதால், அவனது திருவிளையாடலை நினைத்து நெக்குருகி, இந்தச் சிவபுராணப் பதிகத்தை ஓதி, சீட்டாடியோ, பக்திப் படங்கள் பார்த்தோ, பட்டிமன்றம் பார்த்தோ விரதிப்போம். மாணிக்க வாசகர் அருளாத சிவபுராணம். தொல்லைதரும் தெய்வத் துன்பம் தனைக்காட்ட வல்லவனே உன்னை வம்பிழுத்தேன், தொல்லுலகின் முன்னைத் தமிழ்மகனே உன்னை வதைக்கமாட்டேன், என்னை, வணங்கவேண்டாக் கால். நமச்சிவாய வாழ்க, நாசமறுப்பே வாழ்க இமைப்பொழுதும் இழிசெயல்கள் நீக்காதான் தாள்வாழ்க கோகளை ஆண்ட முதுதமிழர் வாழ்வெல்லாம் நாசமும் ஆனபோதும் நகராதான் தாள்வாழ்க ஏகன் அநேகனென இறைவன் அடிதொட்டோர் வாழ்க்கை கெடுத்தாண்ட வெத்தன் அடி வாழ்க பிறப்பறுக்கும் சிங்களவர் வெற்றிதந்தான் வாழ்க புறத்தார்க்கே சிறப

காதலர் தினம் - பதிவு போடாவிட்டால் மன்மதன் சாபம்.

படம்
எந்தப் பண்டிகை நடந்தாலும் அது தமிழர்களுக்குப் புறம்பானது, அதன் வரலாற்றுப் பின்னணி மோசமானது... கொண்டாடாதே, பலகாரம் தின்னாதே என்று போடுவதையே பிழைப்பாகக் கொண்ட நான், காதலர் தினத்துக்கும் அப்படிச் செய்தால் காதலிக்குப் பதில் சொல்லவேண்டி வரும் என்பதால், எதற்கு வம்பு என்று காதலர் தினத்தைக் கொண்டாடித் தொலைய முடிவெடுத்தேன். ஏனைய பல விழாக்களைப் போலவே, காதலர் தினமும் அதன் தொடக்கத்தில் வேறு காரணங்களுக்காகப் பின்பற்றப்பட்டு, பின்னர், காலமும் வணிகமும் கலாசாரங்களும் செல்வாக்கு செலுத்த, தத்தமது ஆரம்ப அர்த்தங்களை இழந்ததுதான். ஆனால், எவருக்குமே பாதகமில்லாததாலும், ஆரம்பக் கதைகள் திரிவுபடுத்தப்படாது அப்படியே இருப்பதாலும், காதலர்களுக்கான விழாவாக இதை ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான்.  என்னதான் விழாவாக, தனி நாளாக கொண்டாடப்பட்டாலும், காதலர் தினத்துக்கு தனி அர்த்தம் இல்லை. அன்றைக்கு காதலைச் சொல்ல முடிவெடுப்பது முட்டாள்தனம் என்பது எனது தாழ்மையான கருத்து. காதலைச் சொல்வது உணர்வுபூர்வமாக, காதலின் கடவுள் தேர்ந்தெடுக்கும் நாளாக இருக்கவேண்டுமே தவிர, அற்ப மனிதர்களால் அது முடிவெடுக்கப்பட முடியாதது என்பது எனது அ