இடுகைகள்

ஈர வெங்காயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழன் பெருமை - பல்புகள் :)

படம்
தமிழர் பெருமை, தமிழ் தமிழ் என்று சாவது பற்றி ஏற்கெனவே மூன்று பதிவுகளாக கதறு கதறு என்று கதறிவிட்டேன். அவை: வாருங்கள், தமிழர்களாக இருப்பதற்கு வெட்கப்படுவோம்! SHARE IF YOU ARE PROUD TO BE A TAMILAN! தமிழர்களே, தமிழர்களே!! ஆகவே இந்த முறை காமெடியாக டீல் பண்ணுவோம் என முடிவெடுத்துள்ளேன், எதார்த்தமாக பேஸ்புக்கை உருட்டியபோது தற்செயலாக கண்ணில் பட்ட தமிழ் பெருமை பதிவிலேயே தமிழ் பிழையாக இருந்தது. அந்தப் பக்கத்தை பார்வையிட்டதில் ஏகப்பட்ட பிழைகள். சற்று குஷியாகி வேறுசில தமிழர் பெருமை பக்கங்களை பார்த்தால்... எத்தனை தமிழ் பிழைகள்!!! உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம், நீயும்தானே தமிழ் எழுதும்போது பிழை விடுவாய் என்று.. நான் விடலாம். ஏனெனில், நான் தமிழை உயிர் என்று எப்போதுமே கட்டி அழுததில்லை. தமிழ் உயிர் என்று கதறுபவர்கள் எப்படி ஐயா பிழை விடலாம்? கூடாதல்லவா? அதுவும் அவர்கள் விட்டது எழுத்துப் பிழைகள் மட்டுமல்ல, பாருங்களேன், நீங்களே அந்தக் கேலிக் கூத்துக்களை!

தயவுசெய்து இந்தப் பதிவை ஷெயார் செய்யவும் - 2

படம்
( இந்த அங்கலாய்ப்பின் முதல் பகுதியில் அலம்பியதை இங்கே காணலாம். ) மனிதாபிமானம். யாரோ ஒரு குழந்தைக்கு முகத்தில் ஒப்பிரேசன் செய்ய வேண்டுமாம் , அதுக்காக போட்டோவை ஷெயார் செய்! , ஆபிரிக்காவில் குழந்தைகள் பட்டினியால் வாடுகிறார்கள் , எனவே நீ இங்கே சோறு சாப்பிடாதே! இப்படியாக மனிதாபிமான மாமணிகளின் ஷேயார்கள் உங்களையும் கடுப்பாக்கி இருக்கக் கூடும். மனிதாபிமானத்தை வெளிப்படுத்த ஒரே வழி , செயற்படுவதுதான். சொல்லிக் கொண்டிருப்பது இல்லை. இவற்றை ஷெயார் பண்ணினால் சட் பண்ணும் பெண்கள் வேண்டுமானால் அவர்களை மகாத்மாவாக பார்க்கலாம் , ஆனால் மில்லியன் ஷேயார்கள் வந்தாலும் அங்கெ ஒரு குழந்தைக்குக் கூட காய்ந்த ரோட்டி கிடைக்கப் போவதில்லை. இதைவிடக் கொடுமை என்ன தெரியுமா ? பசிப்பிணியை போக்குவதற்கு ஒரு தளம் நடத்துகிறார்கள். அந்தத் தளத்தின் விளம்பர வருமானமானது பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க பயன்படுகிறது. அப்படி ஒரு தளத்தை பேஸ்புக்கில் ஷெயார் பண்ணிப் பார்த்தேன். அதற்கு ஷெயார் ஏன் , லைக் கூட கிடைக்கவில்லை. உண்மையாக அக்கறை உள்ளவன் ஷெயார் பண்ணி அல்லவா இருக்க வேண்டும் ? இப்படி இருக்கிறது நிலைமை. இதுத

தயவுசெய்து இந்தப் பதிவை ஷெயார் செய்யவும். (1)

படம்
சே குவேரா... புரட்சிக்காரர்களின் இதயத்திலும், கோமாளிகளின் பேஸ்புக் புரபைல் பிக்சரிலும்   வாழ்கிறார்... *             *             * அபாய அறிவிப்பு..: இந்தப் பதிவை வாசித்ததும், எதோ என்னை நான் ஒரு அறிஞனாகவோ, அதிபுத்திசாலியாகவோ எண்ணிக்கொண்டிருப்பதாகவும், வாசிப்பவன் எல்லோருமே முட்டாள் என கருதுவதாகவும், எனக்கு தமிழையோ, உலகத்தையோ, மனிதர்களையோ பற்றி நல்ல அபிப்பிராயமே இல்லை போலவும் தோன்றும். நான் இந்தப் பதிவில் காய்ச்சி இருப்பது, சற்றும் சிந்தனை இல்லாது, வெறுமனே பேஸ்புக்கில் அறிஞர்களாகவும், நல்லவர்களாகவும் காட்டிக் கொள்பவர்களை மட்டும்தான். ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். நான் இங்கே முட்டாள் எனச் சொல்லி இருக்கும் யாருமே, இப்படியாக ஒரு வலைப்பூ பதிவை வைத்து வாசிக்கும் அளவுக்கு வீச்சு அற்றவர்கள்.. அதே வேளை இப்படியாக ஒரு பதிவை வாசிக்குமளவுக்கு உள்ள நீங்களோ, போலி அறிஞராக பேஸ்புக்கில் நடிப்பவர் இல்லை, அப்படி இருக்க முடியாது. *             *             * இந்த உலகத்தின் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்த நல்லவனும், மொழிப் பற்றாளனும், பெண்ணியவாதியும், புரட்சிக்காரனும் வெளிய

ரிசானா படுகொலை : தீராத சந்தேகங்கள்.

படம்
ரிசானா நபீக்கின் படுகொலையானது (எடுத்த எடுப்பிலேயே படுகொலை என குறிப்பிடுவதுபற்றி உங்களுக்கு ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தால் தயவுசெய்து மேலே வாசிக்க வேண்டாம். இந்தப் பதிவு உங்களுக்காக எழுதப்படவில்லை.) உலகத்தின் மனிதர்களை மதிக்கும் அனைவரையும் வெகுவாகப் பாதித்துள்ளது. ஏழு வருடங்களாக நடந்த இந்த இழுபறிப் போராட்டத்தையும், அதன் பின்னணியையும் நாங்கள் அறிந்துகொள்ள, வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக போன ஒரு பெண் பட்ட துன்பத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள, அந்தப் பெண் கொல்லப்பட வேண்டியிருக்கிறது. வழக்கின் வரலாறு, பின்னணி என்பவை தொடர்பில் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். 2005 ஏப்ரல் முதல் திகதி , வேலைவாய்ப்பு முகவர்களின் ஊடாக ரிசானா நபீக் என்கிற சிறுமி , (2 .2.1988 இல் பிறந்த அவ ரை , முகவர்கள் கடவுச்சீட்டு மற்றும் வேலை விசா பிரச்சனைகளுக்காக 1982 ஆம் ஆண்டு பிறந்தவர் என பதிந்தார்கள்.) சவூதி தலைநகர் ரியாத்திலிருந்து நானூறு கிலோமீட்டர் தூரத்திலிருந்த அல் ஓடைபி வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கே அல் ஓடைபி வீட்டின் சமையல் , துப்பரவு வேளைகளில் உதவுவதும் , அல் ஓடைபி , நைப் ஜிசியம்

வெங்காயம் சினிமா விருதுகள் -2012

படம்
தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு அம்சம் விருதுகள். படம் ஓடுகிறதோ இல்லையோ, விருது வேண்டும் நமது கலைஞர்களுக்கு. அதற்காக ஏற்கெனவே விருதுகள் கிடைத்த படங்களை கொப்பி பண்ணி விருது வாங்கவும் அவர்கள் தயங்குவதில்லை. நடிகர்களுக்கு வாளி வைக்கும் பொருட்டு தமிழ் ஊடகங்கள் பலவும், தமக்குத்தாமே விருது வழங்க சங்கங்களும், காசு வாங்கி விருது கொடுபவர்களும், செல்வாக்கால் விருது கொடுக்கும் மாநில, மத்திய அரசுமாக சினிமா விருது என்பதே ஒரு கேலிக்கூத்தாக ஆகிவிட்ட நிலையிலே, எண்பத்தொரு வருட தமிழ் சினிமாவின் உண்மையான தகுதியுடைத்தோருக்கு விருது வழங்க வெங்காயம் குழுமம் முடிவு செய்தது. இரண்டு மாத காலமாக நூற்று இருபத்தேழு அறிஞர்கள், விமர்சகர்கள் கொண்ட ஒரு குழு, திறமை, தகுதி அடிப்படையிலே விருதுக்குரியோரை தெரிவு செய்தது. விருதுக்குரியோருக்கு வெங்காய வடிவிலான ஐம்பது கிராம் தங்கத்தாலான விருதுப் பொறியின் புகைப்படமும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றும் வழங்கப்படும். நகைச்சுவை சிறந்த சந்தேகர் : செந்தில் சிறந்த கோபம் வாற மாதிரி காமெடி பண்ணுபவர் : பவர் ஸ்டார் சிறந்த ஆள் வர்ணனையாளர் : கவுண்டமணி சிறந்த நாகரிக நகைச்ச