கார்ல்மார்க்ஸ்-02
கார்ல்மார்க்ஸின் இரண்டாவது பதிவு இது.... முதல் பதிவைத்தொடர.... கார்ல்மார்க்ஸ்-01 இவரது நண்பர் எங்கெல்ஸ் மட்டும் இல்லையெனில் இவரது இத்தகைய இன்னல்களை தாண்டவோ மூலதனம் என்ற மிகப்பெரும் நூலை எழுதவோ முடியாமல் போய் இருக்கும் ....தனது மகள் இறந்த சமயத்தில் ஜெனி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை” ஆனால் இவரது பின்னைய காலம் சற்று இலகுவாகவே கழிந்த்து. மார்க்ஸுக்கும் ஜெனிக்கும் பிறந்த 6 குழந்தைகளில் மூவரேஉயிர் பிழைத்தனர். அவர்களது பெயர் ஜெனி,லோறா,எலோனர் .மூவரும் தமது காலத்தில் வாழ்ந்த முக்கியா சோசலிச வாதிகளைத்திருமணம் செய்தார்கள். மார்க்ஸ் ஒரு சளையாத எழுத்தாளர். அனேகமான சகல ஐரோப்பிய மொழிகளிலும் அவருக்கு புலமை இருந்தது. அவரது மூலதனம் என்னும் நூல் அவரது வாழ்வின் 40 ஆண்டுகளைப்பிடித்தது என்று கூறுவார்கள். மூலதனம் என்னும் மாபெரும் படைப்பு 1867 செப்தெம்பர் 14 ஹம்பார்க்கில் பிரசுரமானது அதன் முதல் பாகம் கொம்யூனிசத்தின் சாரத்தைக்கொண்டிருந்தது. இரண்...