இடுகைகள்

கார்ல்மார்க்ஸ்-02

படம்
கார்ல்மார்க்ஸின் இரண்டாவது பதிவு இது.... முதல் பதிவைத்தொடர.... கார்ல்மார்க்ஸ்-01 இவரது நண்பர் எங்கெல்ஸ் மட்டும் இல்லையெனில் இவரது இத்தகைய இன்னல்களை தாண்டவோ மூலதனம் என்ற மிகப்பெரும் நூலை எழுதவோ முடியாமல் போய் இருக்கும் ....தனது மகள் இறந்த    சமயத்தில் ஜெனி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை” ஆனால் இவரது பின்னைய காலம் சற்று இலகுவாகவே கழிந்த்து. மார்க்ஸுக்கும் ஜெனிக்கும் பிறந்த 6 குழந்தைகளில் மூவரேஉயிர் பிழைத்தனர். அவர்களது பெயர் ஜெனி,லோறா,எலோனர் .மூவரும் தமது காலத்தில் வாழ்ந்த முக்கியா சோசலிச வாதிகளைத்திருமணம் செய்தார்கள். மார்க்ஸ் ஒரு சளையாத எழுத்தாளர். அனேகமான சகல ஐரோப்பிய  மொழிகளிலும் அவருக்கு புலமை இருந்தது. அவரது மூலதனம் என்னும் நூல் அவரது வாழ்வின் 40 ஆண்டுகளைப்பிடித்தது என்று கூறுவார்கள். மூலதனம் என்னும் மாபெரும் படைப்பு 1867 செப்தெம்பர் 14 ஹம்பார்க்கில் பிரசுரமானது அதன் முதல் பாகம் கொம்யூனிசத்தின் சாரத்தைக்கொண்டிருந்தது. இரண்டாவது பாகத்தை

பெண்களின் கண்டுபிடிப்புக்கள்

படம்
20 ஆம் நூற்றாண்டின்   முடிவில் 10 % ஆன பெண் கண்டுபிடிப்பாளர்கள் மட்டுமே  பரிசளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளர்கள் கடந்த சில நூற்றாண்டுகளின் புகழ் பெற்ற கண்டுபிடிப்புக்களை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக் பெண்களின் பெயர்கள் இருக்கும் பொதுவாக ஒருபெண் தனது கண்டுபிடிப்புக்களை வெளி கொண்டுவருவதற்கு அதிக அளவு தடைகளை தண்டவேண்டி இருக்கிறது  1700 களில் அமெரிக்காவிலும் பெண்கள் விஞ்ஞான கற்கைகளை கற்பது விரும்பத்தகாததாக இருந்தது 1700 களில் அமெரிக்காவில் ஒரு சட்டம் இருந்தது  பெண்களுக்கு எந்த ஒரு சொத்தும் உரிமையாக இருத்தல் கூடாது என்பதுதான் அது  இவர்கள் இக்காலத்தில் தமது கண்டுபிடிப்புக்களையோ அல்லது ஒரு உள்ளநாட்டு தயாரிப்பையோ வெளியிட நேர்ந்தால் தமது தந்தையின் பெயரிலோ அல்லது கணவரின் பெயரிலோதான் உரிமம் பெற்று வெளியிடப்படவேண்டியிருந்தது. இவற்றை தாண்டி தனது தயாரிப்பிற்கு தனது பெயரிலேயே உரிமம் பெற்ற  முதல் அமெரிக்க பெண்  Mary  kies  1809 இல் பெற்றார் . 1 ஆம் உலகப் போரினால் பெண்களுக்கு ஒரு எதிர்பாராத நன்மை ஏற்பட்டது.உலகப் போருக்கு முன்பாக பெண்கள் ஆணுக்கு நிகராக வேலைவாய்ப்பும்,வோட்ட

ஒரு நிஜக் கதாநாயகன்..!

படம்
இது எனது முகப்புத்தகத்தில் ஷெர் செய்யப்பட்ட உருக்கமான சம்பவம் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சோதனைகளை சாதனையாக்கிய ஏழை மாணவன். கண்ணீர்துளிகளை மலர்கொத்துகளாக மாற்றிய சிறுவன் மாரிசெல்வம். சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்...வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட் டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. “மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த  கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்ட

‘செல்வி’ ஜெயலலிதாவின் மகள் சேலம் ஜெயிலிலா?

படம்
பிரியா மகாலட்சுமி என்ற பெயருடைய ஒரு பெண், தான் தான் முதல்வர் ஜெவின் மகள் என்று கூறி பலரிடம் தொலைபேசியில் பேசி, அவர்களுக்குக் காரியம் ஆக வேண்டுமானால், தனக்குப் பணம் தர வேண்டும் என்று பேரம் பேசி வருவதாகவும், ஒருசில அ.தி.மு.க. அமைச்சர்கள், தொழிலதிபர்கள் முதல் சாதாரண அ.தி.மு.க. உறுப்பினர்கள் வரை அப்பெண்ணை, அவரது கிருஷ்ணகிரியிலுள்ள இல்லத்தில் சந்தித்து வருவதாகவும் கடந்த 24 ஆம் திகதிய ஜூனியர் விகடன் இதழில் “ அம்மா பேரைச் சொல்லி ஒரு போன்! ” என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி எழுதியிருந்தார்கள். அந்தப் பெண் குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் அந்த இதழில் குறிப்பிட்டிருந்தார்கள். தற்போது, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சேலம் பெண்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. கோவிந்தன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.    பிரியா மகாலட்சுமியை சத்தமில்லாமல் கைது செய்து சேலம் ஜெயிலுக்குக் கொண்டு போனது வரை யாருக்கும் வெளியில் விஷயம் தெரியாது. சேலம் போலீஸார் , இந்த விஷயத்தை ரொம்பவே கமுக்கமாக அடக்கி வாசித்து இ

Pepsi-Cola வின் பழைய விளம்பரங்கள்

படம்
ஆரம்பகால பெப்ஸி இதுதான்.1898 இல்   Caleb Bradham ஆல் உருவாக்கப்பட்டது.அப்பொழுது இதற்கு "Brad's Drink"  என பெயரிடப்பட்டிருந்தது.1903 இல் இது Pepsi Cola வாக மாறியது 1961இல் Pepsi எனப் பெயர் மாற்றமடைந்தது.