இடுகைகள்

history லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூடத்தார் கோயிலும் குமுறலில் தப்பித்த கதையும்

படம்
ஏமாற்றமான எதிர்பார்ப்புக்களும்  சிதைந்து போகும் சின்னங்களும் - 03 எங்கள் ஊர்சுற்றலில் நடந்த அனுபவங்களுடன் வரலாறுகள் பற்றியும் பார்த்துக்கொண்டிருக்கிறோம் இல்லையா...??? இவ்வாறு யாழ்ப்பாணத்தின் ஊர்களையே மேய்ந்து கொண்டிருந்த நமக்கு இளவாலை எனும் ஊருக்கும் போக வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே கூடத்தார் கோயில் எனும் இந்நினைவுச்சின்னம் குறித்த கட்டுரையொன்று எங்களூர்ப் பத்திரிகைகளில் வெளியாகி இருந்ததால் அதையும்  படித்து விட்டு மிக்க ஆவலுடன் அங்கே பயணித்தோம். முன்னைய பதிவுகளில் கூறியது போல் கோப்பாய் கோட்டை ,வெடியரசன் கோட்டை என கோட்டையையே சுற்றி திரிந்து நொந்து நூலாய்ப்போன எங்களுக்கு இளவாலையில் வசந்தபுரத்திலிருந்த கூடத்தார் கோயில் எனும் சரித்திர நினைவுச் சின்னம் ஒரு முற்றிலும் புதிய அனுபவத்தை கொடுத்தது. அது எந்தளவிற்கு இருந்ததென்றால் “தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்” எனும் பழமொழியின் ஆழத்தை ஆத்மசுகத்துடன் அனுபவித்து மூச்சு கூட விட முடியாதபடி மூச்சை விட்டு தப்பி ஓடி வரும்படி செய்துவிட்டு  இருந்தது.  கூடத்தார் கோயிலும் வரலாறும்                        இலங்கையின் தொல்குடி திராவிடர

அமெரிக்க உள்நாட்டு யுத்தமும் அடிமைகள் பிரச்சனையும்

படம்
வெள்ளை மாளிகையின் கருப்பு அடிமைகள்-06 அடிமைமுறையை ஒழிப்போம் என அணிதிரண்ட வட மாநிலங்கள் ஒருபுறம், பண்ணைகளுக்கும் விளைநிலங்களுக்கும் தீயிட்டுவிட்டு தப்பி வந்த அடிமைகள் ஒருபுறம், அடிமை முறையை ஆதரித்த அடிமைகளால் பாதிப்படைந்த தென் மாநிலங்கள் ஒருபுறம் என பல சிக்கலான சூழ்நிலைகள் நிலவின அன்றைய அமெரிக்காவில் என்பது பற்றி போன பதிப்பில் பார்த்தோம். அப்பதிவை வாசித்துவிட்டு தொடர இங்கே கிளிக்.                                                        இவ்வாறு பல சிக்கல்களான சூழலின் மத்தியில் அமெரிக்க அதிபரின் பணி முக்கியமானதாக அமையப்போகும் கட்டத்தில்தான் “அடிமைமுறையை ஒழிப்பேன்” எனும் வாக்குறுதியை முன்வைத்து போட்டியிட்ட ஆபிரகாம் லிங்கன் 1860 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தார்.                                                    அவ்வளவுதான் அடிமைமுறையை ஒழிக்கிறேன் பேர்வழி என அடிமைகளை ஆதரித்தவர் ஒருவர் தமக்கெல்லாம் அதிபராக இருந்தால் தங்கள் எல்லோருக்கும் மிகப்பெரும் அவமானம் என கிளர்ந்தெழுந்துவிட்டனர் தென்மாநிலத்தார். முதலில் தன் எதிர்ப்பை கச்சிதமாக தெற்கு கரோலினா வெளி

எரிந்த யாழ் நூலகமும் சிதைந்த பண்பாடும் - இனபேதத்தின் உச்சம்

படம்
புதிய நூலகத்திற்கான இடத்தெரிவும் கட்டிட அமைப்பும்  [இதன் முன்னைய பதிவிற்கு இங்கே]   யாழ்பாண மத்திய நூல்நிலைய சபை என நூலகத்தின் உருவாக்கத்திற்காக தொடங்கப்பட்ட இச்சபையின் தலைவராக நகரபிதா சாம் சபாபதி அவர்களும் உபதலைவராக லோங் சுவாமிகளும் இருந்து கடுமையாக உழைக்கலாயினர். பல இடங்கள் நூலகத்தின் அமைவிற்காக பலதரப்பட்ட சிக்கல்களின் மத்தியில் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக அரசினர் நகரநிர்மான நிபுணர் திரு.வீரசிங்கா அவர்களின் தெரிவிற்கமைய தற்போது நூலகமுள்ள பழைய முற்றவெளி எனும் இடம் தெரியப்பட்டது. நல்ல நேரத்தில் லோங் சுவாமிகளின் ஆசியுடன் சைவாசாரமுறைப்படி அத்திவாரம் வெட்டி 29/03/1954 அன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அன்றைய நகர மேயர் சாம் சபாபதி, வணக்கத்திற்கு உரிய தந்தை லோங் சுவாமிகள், பிரித்தானியத்தானிகர் சேர்.செரில்சையஸ், அமெரிக்க தூதுவர் எச்.ஈ.பிலிப்கிகுறோவ், இந்தியத்தூதுவரின் முதற் செயலாளர் ஸ்ரீ சித்தார்த்த சாரதி, போன்றோர் திரை நீக்கம் செய்து வைத்தார்கள்.                                                             அன்றைய நாளில் நூலகத்தின் வளர்ச்சிக்காக அமெரிக்க உதவியாக 22000 டொலர்கள

யாழ்பாண நூல்நிலையம் – ஆரம்ப வரலாறு

படம்
ஓர் சமூகத்தின் சிறப்புமிக்க அடையாளமாக காணப்படுவது அச்சமூகத்தின் அறிவுத்தேடலும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும்தான். அந்தவகையறாக்களில் யாழ்பாண நூல்நிலையம் என்பது வெறுமனே யாழ்பாண தமிழர்களின் அடையாளமாக மட்டும் நோக்கப்படாது ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களின் சாதனைச்சின்னமாக நோக்கப்படுகிறது. அதன் காரணமாகத்தான் அது தன் வர்ணப்பூச்சு சுவர்களுக்குள்ளே பல யாழ்ப்பானத்தவரின் உழைப்பை மட்டும் சுமக்காது பல எரிகாயங்களையும் சுமந்து நிற்க்கிறது. ஓரிடத்தில் ஒரு அறிவுசார்ந்த கட்டிடம் எழுகிறதென்றாலே அதன் பின்னால் அவ்விட மக்களின் கடின உழைப்பும் கடும் முயற்சியும் இருக்கிறது என்று தானே பொருள். அந்தவகையில் யாழ்பாண நூலக வரலாற்றை அரசியல் சார்ந்த காரணங்கள் அன்றி வரலாற்று நோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு அறியத்தருவதே இத்தொடரின் நோக்கம். தோற்றுவாயும் தொடக்கமும் இன்று பெரியஅளவில் பல புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் தன்னுள்ளே கொண்டு இருக்கும் இந்த நூலகம் 1933 ஆம் ஆண்டு ஒரு சிறு கொட்டிலில் வாசிகசாலையாக இருந்து படிப்படியாக அறிஞர்களின் கடும் முயற்சியாலேயே இன்றைய நிலையை அடைந்துள்ளது.                            

போராட்டமில்லாமல் விடுதலை இல்லை

படம்
வெள்ளை மாளிகையின் கருப்பு அடிமைகள்-05  போன பதிப்பில் அடிமைகளுக்காக போராடிய அபாலிஷனிஸ்ட் எனும் இயக்கத்தையும் அதற்கு உறுதுணையாய் நின்ற காரிசன் மற்றும் டக்ளசைப் பற்றி பார்த்தோம். அப்பதிவை வாசித்து விட்டு தொடர இங்கே கிளிக்.                 இவ்வாறு காரிசனும், டக்ளசும் இணைந்து மேற்கொண்ட பிரச்சாரங்களும் போராட்டங்களும் அமெரிக்க மக்களுக்கு அடிமைகள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை தெளிவுபடுத்த தொடங்கின.                                             தங்களை போன்ற ஓர் அடிமை தப்பித்ததும் அல்லாமல் தமக்காக எல்லாம் போராட்டங்களிலும் கூட்டங்களிலும் ஈடுபடுவது கறுப்பினக் கூட்டத்தாரிடையே டக்ளசை தங்கள் மனச்சாட்சியின் உருவமாக பார்க்க வழிவகுத்தது. 1840 ஆம் ஆண்டுகளின் பின்னர் எல்லாம் கருப்பினத்தாருக்கும் அடிமைகளுக்கும் டக்ளஸ்தான் ஒரு நடமாடும் கடவுளாக தென்பட்டார். இவ்வாறு ஆங்காங்கே தலை தூக்கிய “அடிமை முறையை ஒழிப்போம்” எனும் இக்கோசம்தான் படிப்படியாக வளர்ந்து 1860  ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்  அடுத்த அமெரிக்க அதிபர் யார்..?? எனும் கேள்விக்கு பதிலாக அமைந்தது. இக்காலகட்ட தேர்தலில் அடிமைகள்

அடிமை எதிர்ப்பும்....சுதந்திரத்திற்கான பாதையும்.....

படம்
வெள்ளை மாளிகையின் கறுப்பு அடிமைகள்-04 போனபதிப்பில் அடிமைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஏதோ என்னால் முடிந்தவரை சுருக்கமாக தந்திருந்தேன். அப்பதிவை வாசிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்து வாசித்து விட்டு தொடரவும்.                                                                                                             இவ்வாறு கையில் கிடைத்த எலியை கொல்வதுபோல் அடிமைகளை கொன்று போட்டாலோ அல்லது உடல் பாகங்களை வெட்டிஎறிந்தாலோ யாருமே கேள்வி கேட்க மாட்டார்களா எனும் சந்தேகம் நிச்சயம் வாசகர்களுக்கு எழுந்திருக்கும். அந்தவகையில் நாம் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் அமெரிக்கா என்பது ஒரு முதலாளித்துவ நாடு மட்டுமல்ல ஆட்சிபீடத்திலிருந்த அதிகாரிகளும், சட்ட வல்லுனர்களும் , ஏன் அமெரிக்க அதிபர்களில் வாஷிங்டன் உற்பட பெரும்பாலானவர்களும் கூட பண்ணையார்களாகவே இருந்தார்கள். இதனால் அவர்களுக்கு அடிமைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தெரிந்திருந்தும் கண்டும் காணாமல் விட்டு விட்டார்கள் அல்லது ஆதரித்தார்கள் ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் அடிமைகளை வைத்திருந்தார்கள்.           இவ்வளவு ஏன் அந்நாளைய அமெர

9/11 தாக்குதல் C.I.A,F.B.I என்ன புடுங்கிக்கொண்டிருந்தது?

படம்
9/11 தாக்குதலுடன்சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் அமெரிக்காவிற்கு தாக்குதல் நடைபெறுவதற்கு 1  வருடம் முன்னதாகவே சிறு சிறு குழுக்களாக போய்ச்சேர்ந்துள்ளார்கள்.அமெரிக்காவை அடைந்ததும் அங்கு விமானப்பயிற்சி நிலையங்களில் இணைந்து விமானம் ஓட்டுவதுதொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபட்டார்கள்.இத்தீவிரவாதக்குழுக்கள் அமெரிக்காவில் ஒருவருடத்திற்கு மட்டும் செலவளித்த தொகை 4 இலட்சத்தில் இருந்து 5 இலட்சம் டொலர்கள்.தாக்குதலில் சம்பந்தப்பட்ட 19 தீவிரவாதிகளும் ஒன்றாக இணைந்தது தாக்குதல் நடைபெறுவதற்கு சரியாக 2 மாதங்களுக்கு முன்னால்.2001இன் முதல் 4 மாதங்கள் தனியார் விமானப்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றார்கள்.வெளியே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதால் உள்ளூரில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று உடல்வலுவேற்றல் பயிற்சிகளை செய்தார்கள்.    இதன் முதல் பதிவு   9/11விமானத்தின் உள்ளே நடந்தது என்ன?-03 2001 ஜூலை 30 இல் கடத்தல்காரர்களில் சிலர் இலக்கற்ற சில பயணங்களை மேற்கொண்டார்கள்.நகரத்திற்கு நகரம் பயணித்தார்கள்.இந்தப்பயணங்கள் எல்லாம் அதுவரை விமானத்தில் பயணம் செய்யாத தீவிரவாதிகளுக்கு விமானத்தின் அமைப்பையும் அ