இடுகைகள்

கலைப்பொருட்களாக மாறிய உணவுப்பொருட்கள்

படம்
உணவுப்பொருட்களை சாப்பிடுவதற்கு மட்டுமின்றி இப்படியும் பயன்படுத்தலாம். கலை '  மனிதனாக  பிறந்த ஒவ்வெருவனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா அது எம்.ஆர் ராதா கூறியது இதைத்தான்.உணவுக்கண்காட்சி போன்றவற்றை நடத்தி இவ்வாறான திறமைகளை ஊக்குவித்திவருகின்றார்கள். எப்படி இருந்தது இப்படி ஆகிடிச்சு இப்படியும் பயன்படுத்தலாம் .......

யு டியூப் சூப்பர் ஸ்ரார் சாம் அண்டர்சன்

படம்
sam anderson கூகிளில் தேடியதும் அணு உலை எதிர்ப்பு என்று வந்துவிட்டது பீதியாகிவிட்டேன்.சரி ஆங்கிலத்தில் தலையின் பெயரைத்தேடினால் எத்தனை ரிஸல்ட் வந்தது தெரியுமா  38,700,000 results  (0.52 seconds) அட...அட...அட... (மணிவண்ணன் குரலில்)  தலையுடன் போட்டியிடும்  எதிர்க்கட்சிக்காரர்களைக்கேட்கின்றேன்.சூப்பர்  ஸ்ராரைத்தேடினால் கூட  இவ்வளவு  ரிஸல்ட் வருமா? (இதற்கு மேல் விறுவிறுப்பாக தலையைப்பற்றி  என்னால் எழுத முடிய வில்லை)  தலையை எத்தனை பேர்  தேடுகின்றார்கள் என்று நன்றாகவே தெரிந்தது.சாம் அண்டர்சனை உங்களுக்கு தெரியாது என்றால் உங்களுக்கு யு டியூப் பற்றி எதுவும் தெரியாது என்றுதான் அர்த்தம்.தலையப்பற்றி அறியும் ஆர்வத்தில் விக்கிபீடியாவில் தேடினால் அதில் தலையைப்பற்றி தரக்குறைவாக எழுதி இருந்தது.   There are lot of mock fan base for sam anderson.He has mentioned that he was zero in acting and will try to act in one more movie for his satisfaction. இதன் தலையின் ரசிகர்கள் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.இவர் திரைக்கதை வசனம் போன்றவற்றுடன் நடிக்கவும் கற்றுக்கொண்டிருக்கின்றார் என்பதையும் தெ

'World's youngest CEO' - கொஞ்சம் வளரவிடுங்கப்பா

படம்
இன்றைக்கு எனக்கு தெரிந்த ஒருவரோடு நடந்த சம்பாஷைனைதான் எனக்கு இந்த விடயத்தை ஒருதரம் அலசி பார்க்க தூண்டியது. சுத்தி வளைக்காம விடயத்திற்கு வரலாம். எல்லாரும் ஒருதரம் கூகுள் தேடல் தளத்திற்கு போய் "World's youngest CEO" என்று தேடிப்பாருங்கள். கீழ்க்காணும் படத்தில் உள்ளவர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.  இவர்கள் இருவரும் சகோதரர்கள், இதில் மூத்தவர்(வலது) பெயர் சரவண் குமரன்(வயது 12) இளையவர் சஞ்சய் குமரன்(வயது 10) இருவரும்தான் அந்த "world's youngest CEO". இருவரும் சேர்ந்து Java கணணி மொழியை பயன்படுத்தி apple store க்காக உருவாக்கிய apps பயனர்களால் பல்லாயிரம் தடவை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையாக வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட கம்பெனிதான் Go Dimensions. இவர்களைப்பாராட்டி முகப்புத்தகத்தில் ஏகப்பட்ட postகளும் உண்டு. இந்த கட்டுரைக்குள் மேலே செல்வதற்கு முன்னர் இவர்களுடைய வெற்றிக்கு எனது பாராட்டுக்கள். "நீயெல்லாம் பாராட்டி.." என்று உங்கள் மனக்குரல் எனக்கு கேட்கிறது. நீங்க நினைப்பதும் சரிதான், எனக்கு தெரிந்த வரைக்கும் நான் 10 வய

வரலாற்றின் மிக மோசமான ஒலிம்பிக் தொடக்கவிழா ~ லண்டன் 2012

படம்
5 வளையங்கள் லண்டன் ஒலிம்பிக் தொடக்கவிழா என்றால் சும்மாவா ,   அதுவும் டன்னி போய்ல் வடிவமைத்திருக்கிறார் என்றால் கட்டாயம் பார்க்கத்தான் வேண்டும் என்று 1.30 வரை விழித்திருந்து இடது பக்கம் பொப்கோர்ன் ,   வலதுபக்கம்   பெப்சி போத்தல் சகிதமாக   TV யை   போட்டால் ,   என்னை   நம்பி 230 ரூபாய் முதலிட்டது உனது பிழை என முகத்தில்   குதப்பிவிட்டது   நிகழ்சி. இரண்டாம் தடவை சோதனை எடுத்த மாணவனை அரசாங்கம்   ஏமாற்றியதுபோல ,   கடைசிவரை   இதோ ,   இனித்தான் என்று பார்த்துக்கொண்டிருக்கும்போதே   முடிந்துவிட்டது ,   மூடிட்டு   கிளம்பு என்றுவிட்டார்கள். 2008 பெய்ஜிங் (ஸாங்க் யிமோன்   ஆள்   வடிவமைக்கப்பட்டது)   நிகழ்சிதான்   வரலாற்றின் மிகச்சிறந்த   நிகழ்சியாக   இருக்கும்போலும். 42மில்லியன் செலவில் ஏதோ உள்ளூர் களியாட்ட தொடக்கவிழா போல முடித்துவிட்டார்கள்.    டன்னி போய்ல் உடன் ஸ்டிஃபன் டல்ட்ரி என்ற இன்னொரு இயக்குனரும் சேர்ந்து வடிவமைத்த 3 மணிநேர நிகழ்வு தொடக்கத்திலெல்லாம் நால்லாத்தான் போயிக்கிட்டிருந்தது. அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக பிரிட்டிஷ் அரசி எலிசபத் வருகை அமைந்தது. ஜேம்ஸ்

செவ்வாய்க்கிரகத்தின் பையன்-02

படம்
இதன் முதலாவது பகுதியில் பொறிஸ்கா என்ற சிறுவன்  செவ்வாயில் இருந்ததாக கூறுகின்றான். அங்குள்ள தொழில்நுட்பங்களைக் கூறுகின்றான் பூமியின் ஆரம்ப வரலாறுகளில் இருந்த லேமூரியக்கண்டம் பற்றியும் அபோது வாழ்ந்த லேமூரியன்கள் பற்றியும் கூறுவதையும்.அவனது பிறப்பின்போது ஏற்பட்ட அசாத்தியமான விடயங்களையும் பார்த்தோம். இதன் முன்னைய பகுதிக்கு இங்கே  அங்கு அவனைப்பார்க்க வந்த அனைவருக்கும் அவன் தனது கதைகளைக்கூறி ஆச்சரியப்படவைத்துக்கொண்டிருந்தான். ஏதோ ஸ்டார் வேர்ஸ்ஸைப்பார்த்துத்தான் பில்டப் விடுகின்றானோ எனவும் எண்ணமுடியவில்லை.கதைகள் அவ்வளவு திருத்தமாகவும் தெளிவாகவும் 7 வயது சிறுவனிடமிருந்து வந்துகொண்டிருக்கின்றன.லெமூரியங்கள் வேற்றுக்கிரக சமூகத்தினர் பற்றிய விடயங்கள் 7 வயது சிறுவனுக்கு மிகவும் அப்பாற்பட்ட விடயங்கள்.விஞ்ஞானமே மண்டையக்குழப்பிக்கொள்ள இவன் மட்டும் தைரியமாக அனைவருக்கும் இவற்றைப்பற்றிக்கூறிக்கொண்டிருப்பதுதான் ஆச்சரியமாக இருந்தது. (பொறிஸ்காவுடனான இந்த அனுபவத்தை எழுதியவர்  Gennady Belimov    பொறிஸ்கா தனது 7 வது வயதில் செவ்வாயைப்பற்றி கதைக்க ஆரம்பித்தபோது  எழுதப்பட்டது  எழுத்தாளரின் பார்வையிலேயே